இன்று நள்ளிரவு முதல் பயணக்கட்டு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று(11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும், மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் 30 ஆம்திகதிவரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(10) உத்தரவிட்டார்.

அதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் இந்த பயணக்கட்டுப்பாடு அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir