இலங்கைக்குள் வரும் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை பிர​ஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir