யாழில் கொரோனா விடுதிகள் இன்றிலிருந்து இயங்கும்!

யாழ்ப்பாணம்  மாவட்டத்தின் பிரதேச மற்றும் ஆதார மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா விடுதிகள் இன்றிலிருந்து செயற்பட ஆரம்பிக்கவுள்ளன.

கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் வடக்கில் உள்ள மாவட்ட மற்றும் ஆதார மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச மருத்துவமனையிலும் ஆண், பெண் விடுதி என்று அமைக்கப்பட்டு அவற்றுக்கு தலா 20 கட்டில்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவை இன்றிலிருந்து செயற்படவுள்ளன.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தற்போதைய நிலையில் ஒரு விடுதி இன்றிலிருந்து செயற்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir