சுவரொட்டிகளை ஒட்டிய 17 பேர் கைது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியமை தொடர்பில், 17 பேரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்யுள்ளனர்.

கொவிட் பரவல் தீவிர நிலைக்கு மத்தியில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்து தலைநகர் டெல்லியின் பல பாகங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘தங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தீர்கள் என அந்த சுவரொட்டிகள் மூலம் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், டெல்லி காவல்துறையினர் 17 பேரைக் கைதுசெய்துள்ளதுடன், 800 இற்கும் அதிகமான சுவரொட்டிகளையும், பதாகைகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir