142,746 ஆக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 63 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 63 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2275ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 142,746 ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir