35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வந்தது

35 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதுடெல்லியில் இருந்து வருகை தந்துள்ள ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும்  வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு, இந்திய விமானங்கள் இலங்கை வருவதனை அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தற்காலிகமாக இடை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir