ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி, உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பத்தரமுல்லையில், பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்னாள், ஜே.வி.பி  நேற்று 19  முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

ஜே.வி.பியின் பிரசார செயலாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir