இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் 30 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கருப்பு பூஞ்சை நோய் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir