பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கு பூட்டு

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு போன்ற பயண கட்டுப்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு புதிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அனைத்து மதுபான நிலையங்களையும் குறித்த தினம்வரை மூடுமாறு அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

ஆகவே பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் காலத்திலும் மதுபான விற்பனை நிலையங்களை மூடும் அறிவிப்பு பல்பொருள் அங்காடிகளுக்கும் பொருந்தும் என்றும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir