கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கைது

சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையால் அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மார்க்ரட் சில்வாவே இந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir