மட்டக்களப்பில் மேலும் 128 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என இன்று (27) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார் .

அதேவேளை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கு கரடியானாறு வைத்தியசாலை, காத்தான்குடி ஆதாரவைத்தியசாலை, பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளது. எனவே அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை வேறு மாவட்டத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர் எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளி செல்வதை தவிர்ப்பதன் மூலம் கொரோனா தொற்றை தடுக்கமுடியும் என அவர் மேலு தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir