முல்லைத்தீவில் ரோன் கமரா மூலம் கண்காணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணத்தடை அமுலில் உள்ள வேளை மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முடக்கப்பட்ட நகரங்களின் பகுதிகளில் ரோன் கமராவினை பறக்கவிட்டு மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படையினரும் காவற்துறையினரும் ஈடுபட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமங்கள் முடக்கப்பட்டடுள்ள நிலையில் நகர் புறங்களை அண்டிய பகுதிகளில் காவற்துறையினருடன் ரோன் கமராவினை பறக்கவிட்டு மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தொடக்கி வைத்துள்ளார்கள்.

மாவட்டத்தின் ஏனைய நகரங்களின் பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு விமானப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

You May Also Like

About the Author: kalaikkathir