உலர் உணவுப் பொதி வழங்கல்

முல்லைத்தீவு வற்றாப்பளை மற்றும் கேப்பாபுலவு நீராவிப்பிட்டி மேற்கு பிரிவுகளில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொழில் பாதிக்கப்பட்டுள்ள 246 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

வன்னியின் கண்ணீர் அவுஸ்திரேலியா என்னும் அமைப்பு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தின் ஊடாக முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலகம் வழங்கிய விபரத்தின் அடிப்படையில் கிராமசேவையாளர் ஊடாக குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

மேலும் வன்னியின் கண்ணீர் அவுஸ்திரேலியா என்னும் அமைப்பு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தின் ஊடாக கரைதுறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தண்ணீருற்று, முள்ளியவளை உள்ளிட்ட பகுதிகளிலும் வறுமைகோட்டின் கீழ் வாழும் 454 குடும்பங்களுக்கு உலர்உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir