மீன் பிடியில் ஈடுபடும் இராணுவம்

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குளம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குளத்தில் தொடர்ச்சியாக இராணுவம் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று (31) மதியம் குறித்த பகுதிக்குச் சென்று நேரடியாக குறித்த சம்பவத்தை அவதானித்தார்.

திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குறித்த குளத்தை கமக்கார அமைப்பு கமநல கேந்திர நிலையத்துடன் இணைந்து திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மீன் பிடிப்பதற்கு மூன்று மாத கால குத்தகை அடிப்படையில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்று மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

எனினும் இராணுவத்தினர் எவ்வித அனுமதியும் இன்றி இரவு பகல் பாராது குறித்த குளத்தில் தொடர்ச்சியாக மீன் பிடித்து வந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir