நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார கோளாறு

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில்  ஏற்பட்ட கோளாறு காரணமாக  நீர் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளது என  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால் இன்றைய தினம் கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும்,மொரகஸ்முல்ல, ராஜகிரிய மற்றும் ராஜகிரிய பிரதான வீதிக்குட்பட்ட இடங்கள் முதல் நாவல சந்தி வரையில் நீர் வழங்கலில் தடை ஏற்படும்.

எனினும் மின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir