17 மணித்தியாலத்தை கடந்து முல்லைத்தீவில் மின்தடை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மின் தடையேற்பட்டுள்ளது.இதனால் குறித்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நேற்றைய தினம் (4) மாலை 4 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இந் நிலையில் குறித்த பகுதியில் 17 மணித்தியாலயத்தை கடந்த நிலையிலும் இன்று (05) காலை 9 மணிவரையும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை இதனால் குறித்த கோம்பாவில் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனவே குறித்த மின்சார தடை தொடர்பாக நேற்றையதினமும், இன்று காலையும் மின்சார சபையினருக்கு முறைப்பாட்டினை வழங்கிய போது மரம் முறிந்து வீழ்ந்தமையால் மின்சாரம் தடைப்பட்டதாகவும் சில மணித்தியாலயங்களில் சரிசெய்வதாகவும் கூறியிருந்த நிலையில் இதுவரை மின்சார சபையினரின் அசமந்த போக்கினால் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir