தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர்களில் அதிகமானோர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் 129 பேரும், நிக்கவரட்டிய பிரதேசத்தில் 75 பேரும் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir