நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் ஆரம்பம்

இவ் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைவாக இன்று காலை 10 மணி முதல் மாலை 04.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு வரையறுக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை நிதி தொடர்பான சட்டங்கள் குறித்தும் மாலை நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மற்றும் தீப்பற்றிய கப்பல் குறித்த விவாதங்களும் நடைபெறவுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir