பதுளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் இன்றைய தினம் செலுத்தப்படவுள்ளன.

பதுளை மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் உப செயலாளர் சுப்பிரமணியம் சுதர்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தியத்தலாவை – பாலகதுருகம, பண்டாரவளை – எத்தளபிட்டிய, எல்ல – கித்தல் எல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 160 பேருக்கு இன்றையதினம் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir