டெங்கு பரவல் இலங்கையில் தீவிரம்

இலங்கையில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள அதேநேரம், அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய அனுர ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் பல இடங்களில் மழை மற்றும் வெள்ள சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் அடுத்தவாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக கொழும்பு மாவட்டம், அதிக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir