காலி மாவட்ட சுகாதார பிரிவினர் இருவருக்கு இடமாற்றம்

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, காலி மாவட்டத்தில் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரையை வழங்கியமைக்காக, காலி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவின் பிராந்திய பிரதானி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த நபர்களுக்கு அவர்கள் தடுப்பூசிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதன்அடிப்படையில் அவர்கள் இருவரும் காலி மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir