ராவய அமைப்பின் செயலாளருக்கு கொரோனா

சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவருடைய வாகனச் சாரதிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் நடைபெற்ற இத்தேகன்த சத்தாதிஸ்ஸ தேரரின் தாயாரின் இறுதிச்சடங்கில் மாகல்கந்தே சுதந்த தேரர் கலந்துகொண்டுள்ளார்.

அதேபோல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சர்கள் சிலரும் இத்தேகன்த சத்தாதிஸ்ஸ தேரரின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir