யாழில் கொரோனா சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட கட்டளைத்தளபதி,

யாழ் மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உற்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே தொற்றுநிலைமை அதிகரித்தது

இன்றைய தினம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கவென சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்திருக்கின்றோம் அதாவது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண பணிப்பாளர் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரிவினர் மற்றும் நமது ராணுவத்தினரின் முயற்சியின் பயனாக இன்றையதினம் இந்தப் இடைக்கால சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

இந்த சிகிச்சை நிலையத்தில்200 கட்டில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினருடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொற்றினை இல்லாதொழிக்க உதவ முன்வரவண்டும் என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir