சுகாதார அமைச்சின் கீழ் – கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள்

மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டி, அவிசாவளை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறித்த நோக்கத்திற்காக மேற்கூறிய மாவட்டத்தில் உள்ள பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு சுகாதார அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir