தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் ஒன்றுகூடி நிகழ்வொன்றில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir