கொரோனா தொற்றால் வவுனியாவில் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் நேற்று மரணமடைந்துள்ளார்.

குறித்த முதியவர் சிறுநீரகத்தில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் குருதிச்சுத்திகரிப்பு பிரிவில்  அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார் வவுனியா சூடுவெந்தபுலவை சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

You May Also Like

About the Author: kalaikkathir