மரக்குற்றிகளுக்குள் மறைத்து சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொருட்கள்

காலி சிறைச்சாலை மதிலுக்கு மேலாக எறியப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகளுக்குள் ஒரு கையடக்க தொலைபேசி, மின்னேற்றி மற்றும் 10 சிகரெட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி இரவு, மேற்படி பொதியானது சிறைச்சாலை மதிலுக்கு மேலாக எறியப்பட்டதையடுத்து அதனை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த பொதியில் மரத்துண்டுகள் வைக்கப்பட்டு அவற்றின் நடுப்பகுதியில் மிக சூட்சுமமான முறையில் இவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மீட்கப்பட்ட பொருட்கள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரிடம் ஒப்படைக்கப்பட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir