தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு!

தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு தொழிற்சாலை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir