தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 361 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 361 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 44,216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் பொது இடங்களில் நடமாடியமை, விருந்துபசாரங்களில் பங்கேற்றமை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பந்தையங்களில் கூடி இருந்தமை உள்ளிட்ட காரணங்களால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

You May Also Like

About the Author: kalaikkathir