கொரோனா நிறைவுக்கு வந்தவுடன் புதிய அரசியல் முன்னணி உதயமாகும் -குமார் வெல்கம

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம அறிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்முடன் இணையவுள்ளனர்.

இந்த முன்னணிக்குத் தாமே தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை நிறைவுக்கு வந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir