விதிகளை மீறிய மேலும் 403 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக மேலும் 403 பேர் நேற்று(30) கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதனடிப்படையில் இதுரை 45,935 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்துக்குள் நுழைய முயற்சித்த 59 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir