அரசியல் புரட்சிக்கு தயாராகின்றார் குமார வெல்கம!

புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் ,சந்திரிகா அம்மையார் செயற்படுகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்ச கூட்டணியிலிருந்து வெளியேறிய குமார வெல்கம, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாஸவை ஆதரித்ததுடன், பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதேவேளை, புதியதொரு அரசியல் அணியை உருவாக்கினால்கூட குமார வெல்கம தம்முடனேயே பயணிப்பார் என்று சஜித் அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது

தமது அணி ஊடாக சுதந்திரக் கட்சி மீட்கப்படும் என்ற தகவலை குமார வெல்கம ஏற்கனவே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir