மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் எல்லை வீதி திருத்தம்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் எல்லை வீதி 1ம் குறுக்கு வீதிக்கு தாரிடல் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றதில் மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன், மாநகர உறுப்பினர்கள், பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொக்குவில் எல்லை வீதி 1ம் குறுக்கு 2020ம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட 220மீட்டர் வீதி ஆணையாளரின் இழுத்தடிப்புக்கு மத்தியில் தற்போது தாரிடல் வேலை ஆரம்பித்து வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir