மேலுமொரு பிரதேசம் முடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு காவற்துறை பிரிவுக்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கொரோனாப் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன காவற்துறை பிரிவுக்குட்பட்ட தாபனே கிராம சேவகர் பிரிவு இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir