கஞ்சாவுடன் இருவர் கைது!

வெல்லவ பிரதேசத்தில் நேற்று (05) காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவர்களிடம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா காணப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டடுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir