புத்தளம் நகர சபை உறுப்பினர் கைது

தாம் தாக்கப்படுவதாக தந்தையொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், புத்தளம் நகர சபையின் உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

அவர் இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

70 வயதான அவரது தந்தை, தமது மகனால் தாம் தாக்கப்படுவதாக காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (05) அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir