தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவின் நடுப்பகுதி

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜா பிரதேசம் போன்றன தனிமைப்டுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir