சட்டவிரோத மணல் கடத்தல் ; 15 பேர் கைது

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றமை குறித்து, 13 உழவு வண்டிகளுடன், 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பகுதியில், 11 உழவு வண்டிகளுடன், 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரியாலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 2 பேர் உழவு வண்டி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அக்குரஸ்ஸ பகுதியில் 2 உழவு வண்டிகளுடன், 2 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir