இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று (08) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பொகஹாகொடுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அகலவத்த கிராமமும்,அரஸ்கம கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 07 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir