மலையக பகுதிகளில் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தலினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மலையக மக்களுக்கும் லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இராகலை, கந்தப்பளை, நானுஓயா, கொட்டகலை, லிந்துலை, மஸ்கெலியா, வட்டவளை மற்றும் பின்னோயா ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் ஊடாக இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

You May Also Like

About the Author: kalaikkathir