மாணவிகளுக்கு புகைப்படங்களை அனுப்பியவர் கைது

இணையவழி கற்றலில் ஈடுபடும் பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு, முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டிக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய பின்னர், அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தம்மை சந்திக்கவருமாறு குறித்த நபர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாணவி ஒருவர் தமது பெற்றோருடன் காவல் துறையினருக்கு கொடுத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir