வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று 1,557 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 1,515 பேர் புத்தாண்டு கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir