பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்

ராகமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த மருத்துவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ராகமை வைத்தியர் விடுதியில் வைத்தியர் ஒருவரின் அறைக்குள் புகுந்து ஆடை மாற்றும்போது புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் குறித்த வைத்தியர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir