கரைச்சி பிரதேச சபை பெண் உறுப்பினர் ரி.ஐ.டி. விசாரணைக்கு இன்று அழைப்பு

கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான திருமதி விக்ரர் சாந்தி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பரந்தன் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினரான இவர் மாவீரர் ஒருவரின் தாய் ஆவார்.

இன்று கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அவர் அழைக்கபட்டிருக்கின்றார். வரும்போது உடமைகளையும் எடுத்து வருமாறும் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir