போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பப்பி என அழைக்கப்படும் 36 வயதுடைய படகோட்டி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தொகை போதைப்பொருளை தனது படகில் அவர் எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சில ஆயுதங்களையும் எடுத்து வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பல நாட்களாக தலைமறைவாக இருந்த குறித்த நபர் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir