பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மேலும் சில துறையினரின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று முதல் மத வழிப்பாட்டு தலங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் வெவ்வேறாக வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மிருக காட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உள்ளக இசை நிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir