கிராம சேவகர் மீது வவுனியாவில் தாக்குதல்

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும், பிரதான வீதிக்கும் இடையே உள்ள அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நிலையங்களை அகற்றியிருந்தார்.

குறித்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர்மீது நபர் ஒருவர் நேற்றையதினம் (15) தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir