கிளிநொச்சி உள்ளிட்ட 4 பிரதேசங்களில் 19 பேர் டெல்டா திரிபுடன் அடையாளம்!

நாட்டில் மேலும் பலர் டெல்டா கொவிட் திரிபு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் இந்த டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதேசங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதன் ஊடாக 19 பேர் இவ்வாறு டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை டெல்டா அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir