முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை!

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில் காட்டுயானை ஒன்று உயிருக்காக போராடி வருகின்றது.

தொடர்ச்சியாக குறித்த பகுதி விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த குறித்த யானை விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் கிராம விவசாயிகளால் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல்  வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த பகுதிக்கு  சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும்  நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளார்கள்.

You May Also Like

About the Author: kalaikkathir