ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை(20) இடம்பெறவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir